கர்மவினை

ஒருவர் முன்னொரு ஜென்மத்தில் நன்மை செய்து இருந்தால் நன்மைகளையும் தீமை செய்திருந்தால் தீமைகளையும் இந்த ஜென்மத்தில் அனுபவிப்பது, மூதாதையர்கள் செய்த பாவ புண்ணியத்தின் தொடர்ச்சியே நம் பிறப்பு, அவர்களைப் போன்றே தோற்றத்திலும் செயலிலும் இருப்பதே கர்மவினை, ஆக நம் வாழ்வில் நடப்பதெல்லாம் விதிக்கப்பட்ட தலைவிதி எனில் இல்லை, கர்மவினை என்பது முழுமையான நன்மையும் அல்ல தீமையும் அல்ல, தன்னிலை மறந்து ஒரு இயக்கத்தோடு இணைந்து செயல்படுவது, நம்மை ஒரு சக்தி இயக்கி செயல்பட வைக்கிறது, நான் ஏன் இதைச் செய்தேன், இதை செய்தேன் என்னால் எப்படி செய்ய முடிந்தது, என நமக்கு நாமே விடுகிறோம் அல்லவா, ஆகவே நீங்கள் செய்யும் செயல் சரியா தவறா என சிந்திக்க விடாமல் தடுப்பது கர்மவினை, ஆகவே இதிலிருந்து விடுபடவும், சுயநினைவோடு சுய அறிவோடு உங்கள் ஆத்மா  புதுமலர்ச்சியை பெறவும், நீங்கள் நீங்களாகவே செயல்பட வெற்றி பெற வேண்டுமெனில், கர்மவினை என்னும் பூர்வஜென்ம சாபத்திலிருந்து விடுபட மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும், தியானம் ஆத்ம சாந்திப் பரிகாரங்களை செய்து படிப்படியாய் கர்மவினையின் பிடியிலிருந்து விடுபடலாம்.

சித்தர்கள்

வாழ்வின் நெறி முறையை உபதேசிக்க இறைவனால் படைக்கப்பட்டவர்கள், இப்புவியில் தோன்றிய மாந்தர்களுக்கு சிற்றின்பங்களால் ஏற்படும் துன்பங்களை களைந்து பேரின்பம் அடைவதற்கு தங்களின் தவ வலிமையால் வழிகாட்ட கூடியவர்கள், சித்தர்கள் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் பல்வேறு காலங்களில் தோன்றி இறை தத்துவங்களை தவ வலிமையாலும், ஞானத்தினாலும், மக்கள் பயன்பெற ஓலைச்சுவடிகளில் எதிர்கால நிகழ்வுகளை எழுதி வைத்துள்ளனர், மேலும் மருத்துவ குறிப்புகளையும் சொல்லி சென்று உள்ளனர், ஒரு சித்தர் ஒரு காலத்தில் தோன்றி ஒரு சிலருக்கு காட்சி தந்து மறைந்து போவார், அதே சித்தர் வெவ்வேறு காலங்களில் தோன்றி ஜீவராசிகளுக்கு அருள் தந்து மறைந்து போகும் வல்லமையை பெற்றிருக்கிறார்கள், இன்றளவும், இறை நம்பிக்கையுள்ள சித்தர்களை வழிபடக்கூடிய சில அறிய ஒழுக்கம் மிகுந்த ஜீவா ஆத்மாக்களுக்கு சித்தர்கள் ஏதோ ஒரு வடிவில் காட்சி தருகிறார்கள், சித்தர்கள் பொதுவாக கோபம் மிகுந்தவர்களாகவே அறியப்படுகிறார்கள்.

ஓலைச்சுவடி

ஓலைச்சுவடியை பார்க்க விரும்புபவர்கள் இங்கு நாடிஜோதிடம் வந்தபிறகு முதலில் ஆணாக இருந்தால் வலது கை பெருவிரல் ரேகையும்/பெண்ணாக இருந்தால் இடது கை பெருவிரல் ரேகையையும்,ஒரு வெள்ளை காகிதத்தில் இரண்டு அல்லது மூன்று இடங்களில் மை தடவி பதியவைக்க வேண்டும், இதுவே நேரில் வர இயலாதவர்கள் ஆன்லைன் மூலமாக  WhatsApp email Skype  postalcourier அனுப்ப வேண்டும், நீங்க கொடுத்த ரேகையை நாடி ஜோதிடர் library யில்  உங்களுடைய ரேகைக்கு என்று ஒரு பெயர் இருக்கும் அத்துடன் அந்தக் கால நேரத்தையும் கணக்கிட்டு சுவடியை தேடி தேடி கண்டு பிடித்து கொண்டு வந்து உங்களுக்கு முன் அமர்ந்து நாடி ஜோதிடர் ஓலைச்சுவடி கட்டில் உள்ள ஓலைகளை ஒவ்வொன்றாக படித்து அதில் உங்கள் சம்பந்தமான பலன்கள் இருக்கின்றதா என உங்களின் உதவியுடன் ஓலைச்சுவடி தேடப்படும், ஒருவேளை முதல் ஓலைச்சுவடி கட்டில் இல்லை எனில், வேறு உங்கள் சம்பந்தமான ஓலைச்சுவடி கட்டுக்களை மீண்டும் தேடி கண்டுபிடித்து கொண்டுவந்து நாடி ஜோதிடர் படிப்பார் அப்படிப் படிக்கும் பொழுது உங்களுடைய பெயர் தாய் தந்தை பெயர் நீங்கள் செய்யும் தொழில் உங்களுடைய பிறந்த குறிப்புகள் எல்லாம் அந்த சுவடிகளில் இருப்பதை உறுதி செய்த பின்பு சிறிது நேரத்திற்கு பிறகு அந்த ஓலைச்சுவடியில் உள்ள பலன்களை நிகழ்கால முதல் ஆயுள் காலம் வரையிலும், அல்லது எந்த வயது வரையிலும் எழுதப்பட்டிருக்கின்றதோ , அந்த வயது வரை உங்களுடைய பலன்கள் வாசிக்கப்படும்.

images (2)